கவர்ச்சி உடை அணிந்தால் அதிக சம்பளம் தருவார்கள்... - ரகசியத்தை போட்டுடைத்த காஜல்... ஷாக்கான ரசிகர்கள்...!

Tamil Cinema
By Nandhini Mar 06, 2023 04:11 PM GMT
Report

கவர்ச்சி உடை அணிந்தால் அதிக சம்பளம் தருவார்கள் என்று காஜல் பசுபதி கூறிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காஜல் பசுபதி

தமிழ் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக அறிமுகமாகி, சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காஜல் பசுபதி.

இவர் பிரபல நடன மாஸ்டர் சாண்டியை திருமண செய்தார். இதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என நடிகை காஜல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு, காஜலை விவாகரத்து செய்த பிறகு, சாண்டி சில்வியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

kaajal-pasupathi-actress

கவர்ச்சியாக உடை அணிந்தால் அதிக சம்பளம் தருவார்கள்...

இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘செல்லமே’ படத்தில் நடித்தபோது எனக்கு சம்பளம் ரூ.600தான். இந்த மாதிரி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு ஒரு நாள் கூலி என்பது குறைவுதான். அதே போல கவர்ச்சி பாடல்களில் ஆடுபவர்களுக்கு ஆடையை பொறுத்துதான் சம்பளம் வழங்குவார்கள்.

எந்த அளவிற்கு அவர்கள் கவர்ச்சியாக தெரியும்படி ஆடைகளை குறைவாக அணிகிறார்களோ, அந்த அளவிற்கு சம்பளம் அவர்களுக்கு அதிகமாக வழங்கப்படும்.

அதிக ஆடை உடுத்தியிருந்தால் குறைவான சம்பளமே கிடைக்கும் என்றார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்களுக்கு பின்னால் இருக்கும் சர்ச்சைக்குரிய அரசியலை அந்த பேட்டியில் காஜல் பசுபதி வெளிப்படுத்தியிருந்தார்.