கேரவனுக்குள் நுழைந்து இயக்குநர்; திடீரென அதை கழட்டி.. மோசமான சம்பவம் குறித்து காஜல்!

Kajal Aggarwal Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath May 23, 2024 09:29 AM GMT
Report

தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார்

காஜல் அகர்வால்

பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தொடர்ந்து மோதி விளையாடு, நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, விவேகம், கோமாளி, கருங்காப்பியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கேரவனுக்குள் நுழைந்து இயக்குநர்; திடீரென அதை கழட்டி.. மோசமான சம்பவம் குறித்து காஜல்! | Kajal Aggarwal About Bittersweet Experience

மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!

பயந்து விட்டேன்

அவர் கூறியதாவது "நான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர் ஒருவர் அனுமதி இல்லாமலேயே என் கேரவனுக்குள் அத்துமீறி வந்துவிட்டார். திடீரென்று தனது சட்டையை கழற்றி அவரின் நெஞ்சில் இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டுவை காட்டினார்.

கேரவனுக்குள் நுழைந்து இயக்குநர்; திடீரென அதை கழட்டி.. மோசமான சம்பவம் குறித்து காஜல்! | Kajal Aggarwal About Bittersweet Experience

யாரும் இல்லாத சமயத்தில் அவர் அப்படி செய்ததால் நான் பயந்து விட்டேன். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பு பச்சை குத்தியதன் மூலம் அவர் வெளிப்படுத்தியது ஆனந்தமாக இருக்கலாம். ஆனால், அவர் அதை செய்த விதம் சரியல்ல. வெளிப்படுத்திய விதமும் சரியல்ல என்று மென்மையாக எச்சரித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.