பிளாஸ்டிக் சர்ஜரியா? முகம் வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2007-ஆம் ஆண்டு தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் அறிமுகமான காஜல், 2008-ஆம் ஆண்டு பரத்தின் "பழனி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

அதனை தொடர்ந்து வரிசையாக இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்த காஜல் அகர்வால், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியானார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல்.

2020-ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அடையாளம் தெரியாமல்
இந்த தம்பதிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த காஜல், தற்போது நடிப்பை தீவிரப்படுத்தியுள்ளார். அவருடைய நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தியன் 2, சத்யபாமா போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.

இந்த சூழலில் தான் காஜல் அகர்வாலின் அண்மை புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. அப்படத்தில் காஜலை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்காகி இருக்கிறார்கள்.
அப்படத்தில் அவர் முகத்தில் எதோ ஒரு மாற்றம் உள்ளது. அது என்ன என்பது தெரியவில்லை என்றாலும், ரசிகர்கள் காஜல் அகர்வால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா காஜல்? அல்லது வேறு எதுவம் பிரச்சனையா? என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கிளிநொச்சியில் வீடுகளை உடைத்துத் திருடிய தாய், மகன் கைது :மீட்கப்பட்ட பெருந்தொகை நகை மற்றும் பணம் IBC Tamil