நயன்தாராவின் பழக்கம்...சுத்தமா பிடிக்கல - இதெல்லாம் மாறனும்!! ஓப்பனாக சொன்ன காஜல்!!
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்து சத்யபாமா என்ற படம் வெளிவரவுள்ளது.
காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2007-ஆம் ஆண்டு தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் அறிமுகமான காஜல், 2008-ஆம் ஆண்டு பரத்தின் "பழனி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து வரிசையாக இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்களில் நடித்த காஜல் அகர்வால், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியானார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல்.
2020-ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த காஜல், தற்போது நடிப்பை தீவிரப்படுத்தியுள்ளார்.
அவருடைய நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தியன் 2, சத்யபாமா போன்ற படங்கள் வெளியாகவுள்ளன. இதில் அண்மையில் வெளியான சத்யபாமா படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படம் வரும் 7-ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் தென்னிந்திய திரைத்துறை குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு, நடிகையிடம் சில sterotype இருக்கின்றது. விரைவில் அதிலிருந்து விடுபடுவோம் என்று நம்புகிறேன்.
நயன்தாராவோட
இந்த புதிய தலைமுறை நடிகைகள் அனைவரும் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றுள்ளனர் என்பதை இப்போது உணர்கிறேன். தங்களுக்கு சிறந்த பாத்திரங்களை அளித்தால் அதனை ஏற்போம் படங்களில் முக்கிய பாத்திரங்களையும் ஏற்போம்.
ஆனால், தற்போது நிலை மாறி வருகின்றன. உதாரணத்திற்கு நயன்தாராவைப் போலவே, அவர் தனது திரைப்படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறார் என்பது தனக்கு பிடிக்கும், அவருடைய தேர்வுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.