அமெரிக்காவிலும் வேலையை காட்டிய நித்தி - 30 நகரங்களை ஏமாற்றி அட்டூழியம்

United States of America Nithyananda
By Sumathi Mar 18, 2023 11:11 AM GMT
Report

அமெரிக்காவின் 30 நகரங்களை நித்தியானந்தா ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

கைலாசா

நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது.

அமெரிக்காவிலும் வேலையை காட்டிய நித்தி - 30 நகரங்களை ஏமாற்றி அட்டூழியம் | Kailasa Cons 30 Us Cities With Sister City Scam

இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இதில், எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தியது.

மோசடி அம்பலம் 

தொடர்ந்து, நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரம் கைலாசா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்தி சீடர்கள் தெரிவித்தனர். பல்வேறு கலாச்சாரங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக உருவாக்கபட்டுள்ள சிஸ்டர் சிட்டிஸ் என்ற அமைப்பின்படி இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நெவார்க் நகர மேயர் ரஸ் ஜெ.பராக்கா மற்றும் கைலாசா பிரதிநிதி விஜய்ப்ரியா நித்தியானந்தா இருவரும் ஒப்பந்தம் செய்தனர். இதன் மூலம் கைலாசாவை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக நித்தி சீடர்கள் பெருமிதம் தெரிவித்துவந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதன்மூலம், 30 நகரங்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.