Tuesday, May 6, 2025

அடுத்த ஸ்கெட்ச் - வெளிநாட்டு கோவில்களை வாங்கும் நித்தியானந்தா!

Nithyananda
By Sumathi 2 years ago
Report

வெளிநாட்டு கோவில்கள் சிலவற்றை நித்தியானந்தா வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தா

நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார்.

அடுத்த ஸ்கெட்ச் - வெளிநாட்டு கோவில்களை வாங்கும் நித்தியானந்தா! | Nityananda Buys Temples

இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கைலாசா 

சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்ததாக கூறப்பட்டு இருந்தது தொடர்ந்து, வருகிற 18ம் தேதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கைலாசாவில் கடந்த 5ம் தேதி தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை திறக்கவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.