இளம் வயதில் நரைமுடியா? இதை பண்ணுங்க முதல்ல.. தீர்வு நிச்சயம்!
நரைமுடி மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகான தீர்வை குறித்து பார்ப்போம்.
நரைமுடி
நோய்களிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படும் கடுக்காய் அழகு பராமரிப்பில் தலைமுடிக்கும் பெரிதும் நன்மை செய்கிறது. இதில், ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் இருப்பதாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அத்தகைய பண்புள்ள கடுக்காய் ஹேர் மாஸ்க் குறித்து பார்க்கலாம்.
பயன்கள்
கடுக்காய் - 3 டீஸ்பூன் மருதாணி இலைபொடி - 1 டீஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடி - 1 டீஸ்பூன் நெல்லிப்பொடி - 1 டீஸ்பூன் கற்றாழை - 2 டீஸ்பூன் வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.
கூந்தலை பகுதி வாரியாக பிரித்து தேய்த்து 10 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யவும். அதன்பின், 30 நிமிடங்கள் கழித்து மந்தமான நீரில் அலசி விடவும். இது தலைமுடியை வலுவாகவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படும்.
பொடுகு, பூஞ்சை தொற்று போன்றவற்றை தவிர்க்க செய்யும். இளவயதில் நரைமுடி பிரச்சனை இருந்தால் அதை தடுக்க உதவும்.
நெல்லிக்காய், வைட்டமின் சி நிறைந்ததால் முன்கூட்டியே நரைமுடி ஏற்படுவதை தடுக்கிறது. வெந்தயம், குளிர்ச்சியாக வைத்து முடியை பளபளப்பாக வைக்க செய்கிறது. கரிசலாங்கண்ணி, முடி இழைகளில் மெலனின் உற்பத்தியை அதிகரித்து நரைமுடியை மாற்ற செய்கிறது.