ரொமான்ஸ் காட்சி; தயக்கம் காட்டிய நடிகை, ஃபீல் பண்ணி நடிக்கனும் - பேசி கூல் செய்த அஜித்!
நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து மானு பேசியுள்ளார்.
காதல் மன்னன்
நடிகர் அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் நடித்தவர் நடிகை மானு. அதன்பின், வேறு படங்களில் நடிக்கவில்லை சினிமாவை விட்டு விலகினார்.
இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்,
காதல் மன்னன் படத்தின் இயக்குனர் சரண் சார் தான் என்னை எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அந்தப் படத்தில் நடிக்க வைத்தார். மேலும் எனக்கு ரொமான்ஸ் வராது என்பதை நன்றாக தெரிந்து கொண்ட இயக்குனர் ஒரே ஒரு ரொமான்ஸ் காட்சி மட்டும் வைத்துக் கொள்வதாக என்னிடம் கேட்டார்.
கூல் செய்த அஜித்
அந்த சமயத்தில் நானும் சரி என்று சொல்லி விட்டேன். அஜித் சாரை கட்டிப்பிடிக்கும் படியான ஒரு காட்சி இருந்தது. ஆனால் அந்தக் காட்சி நடிக்கும் போது படபடப்பாக இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. அப்புறம் அஜித் சாரே என்னிடம் வந்து நான் அழகா இல்லையா, என்ன பாத்தா லவ் வரலையா, லவ்வை ஃபீல் பண்ணி நடிக்கணும் என்று பேசினார்.
அப்போதும் எனக்கு சரியாக நடிப்பு வரவில்லை இருந்தாலும் படக்குழு கட்டாயப்படுத்தி நடிக்க வைத்து ஒரு வழியாக அந்த காட்சியை எடுத்து முடித்தனர். கடைசியில் அந்த படம் வெற்றி பெற்று எனக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததற்கு படகுழுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனப் பேசியுள்ளார்.