ஜெயக்குமார் கொலை? வாயில் பாத்திரம் கழுவும் இரும்பு ஸ்க்ரப்பர்; உடலில் கடப்பா கல் - ஷாக் தகவல்!

Indian National Congress Crime Death Tirunelveli
By Swetha May 14, 2024 04:00 AM GMT
Report

ஜெயகுமார் விவகாரம் குறித்த நெல்லை ஐ.ஜி கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஜெயகுமார் 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர் எழுதியதாக 2 கடிதங்கள் சிக்கியது.அதில் அவர் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெயக்குமார் கொலை? வாயில் பாத்திரம் கழுவும் இரும்பு ஸ்க்ரப்பர்; உடலில் கடப்பா கல் - ஷாக் தகவல்! | Kadappa Stone Body Scrubber In Jayakumar Mouth

இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா எனப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லை ஐ.ஜி கண்ணன் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''வீட்டுக்கு பின்புறமே தேக்கு மரம் இருக்கக்கூடிய தோப்பில் அவருடைய சடலம் கருகிய நிலையில் கிடைத்தது.

அந்த நேரத்தில் அந்தச் சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு கொடுத்திருந்தோம். அவர் எழுதி வைத்திருந்த லெட்டர் அவற்றையெல்லாம் வைத்து முழுதாக இந்தச் சம்பவத்தை அந்த நேரத்தில் தற்கொலை என்று சொல்ல முடியவில்லை. அதனால் 'மேன் மிஸ்ஸிங்' கேஸை சந்தேக மரணம் என்ற வழக்கில் மாற்றி விசாரணை நடத்தி இருந்தோம்.

உடலை எரித்தது உறுதியானது; பிரேத பரிசோதனை ரிப்போர்ட் - ஜெயகுமார் விவகாரத்தில் திருப்பம்!

உடலை எரித்தது உறுதியானது; பிரேத பரிசோதனை ரிப்போர்ட் - ஜெயகுமார் விவகாரத்தில் திருப்பம்!

ஷாக் தகவல்

அவரது உடலை உடற்கூறாய்வு செய்த பொழுது முழுமையாக அவரது உடல் எரிந்து இருந்தது.உடல் கறிக்கட்டையாக இருந்தது. முதுகு பக்கத்தில் எரியவில்லை, பின்னங்கால் பெரிய அளவில் எரியவில்லை. காலில் லூசாக கம்பி சுத்தப்பட்டு இருந்தது. உடலில் லூசாக கம்பி சுத்தப்பட்டு இருந்தது.

ஜெயக்குமார் கொலை? வாயில் பாத்திரம் கழுவும் இரும்பு ஸ்க்ரப்பர்; உடலில் கடப்பா கல் - ஷாக் தகவல்! | Kadappa Stone Body Scrubber In Jayakumar Mouth

உடலில் கடப்பா கல் என்று சொல்லும் ஸ்லாப் கல் 13 சென்டி மீட்டருக்கு 50 சென்டி மீட்டர் என்ற அளவில் முன் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. பாத்திரம் கழுவும் ஸ்க்ரப்பர் அவருடைய வாயில் இருந்தது. இதுதான் எங்களுக்கு கிடைத்த எவிடன்ஸ். கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இதற்காக பத்து தனிப்படைகளை உருவாக்கியிருக்கிறோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. இடைநிலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது. இந்த விசாரணையில் அவர் கொடுத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 பேரையும் கூப்பிட்டு விசாரித்து அவர்களிடம் ஸ்டேட்மென்ட் வாங்கி உள்ளோம். அதை வைத்தும் புலனாய்வு செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.