தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி!!
தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.
வழக்கு
செம்மண் குவாரி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உதவியாளர்களுக்கு சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
2006-11 ஆம் ஆண்டின் திமுக ஆட்சியின் போது கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் அமைச்சர் பொன்முடி. அப்போது அவர், அளவிற்கு அதிகமாக செம்மண் அள்ளியதாகவும், அதன் காரணமாக அரசுக்கு சுமார் ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் வந்தது.
இது தொடர்பாக 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறையின் விசாரணையும் துவங்கியது.
கடந்த ஆண்டு பொன்முடி மற்றும் அவரின் மகன் கவுதம சிகாமணி ஆகியோரை விசாரணை செய்தது அமலாக்கத்துறை. இதன் நீட்சியாகவே தற்போது சுமார் ரூ.14.21 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.