அண்ணாமலை நடிப்பில் உருவான ‘அரபீ’ படத்தில் டீசர் வெளியானது - பாஜக தொண்டர்கள் உற்சாகம்

K. Annamalai
By Nandhini Jun 07, 2022 11:25 AM GMT
Report

அண்ணாமலை நடிப்பில் உருவான ‘அரபீ’ படத்தில் டீசர் தற்போது வெளியாகி உள்ளதால், பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். 

அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து முடித்துள்ளார்.

2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. ‘அரபீ’ என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அணுகியுள்ளார். திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்துபோக, அதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார் அண்ணாமலை. இப்படத்தில் அண்ணாமலை 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டு நடித்துள்ளார்.

அண்ணாமலை நடித்துள்ள படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் ஆரவமுடன் காத்திருந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணமலை நடிப்பில் தயாரான, ‘அரபீ’ படத்தின் டீசர் தொழில்நுட்ப காரணங்களால் வெளியிடுவதில் தாமதம் ஆனது.

‘அரபீ’ பட டீசர் 

இந்நிலையில், இன்று அண்ணாமலை நடிப்பில் உருவாகியுள்ள ‘அரபீ’ படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தின் டீசல் வெளியாகியுள்ளதால் பாஜக தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலர் இணையதளத்தில் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.