அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் வெளியீடு தள்ளிவைப்பு : சோகத்தில் தொண்டர்கள்

By Irumporai May 27, 2022 11:27 AM GMT
Report

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட திரைப்படமான அரபி என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து முடித்துள்ளார். 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அனுகியுள்ளார். திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் வெளியீடு தள்ளிவைப்பு  : சோகத்தில் தொண்டர்கள் | Bjp President Annamalai Acts In A Movie

 இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார். அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை நடித்துள்ள படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் ஆரவமுடன் காத்திருந்த நிலையில்,பாஜக தலைவர் அண்ணமலை நடிப்பில் தயாரான, ‘அரபி’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்.

தொழில்நுட்ப காரணங்களால் டீசர் வெளியீடு தள்ளிவைப்பு என பட நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு தமிழக பாஜக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.