எனக்கு சூர்யாவை விட அவங்க தான் நெருக்கம் - ஜோதிகா யாரை சொன்னாங்க தெரியுமா?

Suriya Jyothika Tamil Cinema
By Sumathi Jun 17, 2024 05:30 PM GMT
Report

சூர்யா குடும்பத்தினர் குறித்து ஜோதிகா மனம் திறந்துள்ளார்.

நடிகை ஜோதிகா

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

எனக்கு சூர்யாவை விட அவங்க தான் நெருக்கம் - ஜோதிகா யாரை சொன்னாங்க தெரியுமா? | Jyothika Shares Her Personal Life

பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குடும்ப வாழ்க்கை குறித்து பேசியுள்ள ஜோதிகா,

அந்த ஒரு சம்பவம்தான்; அதனால்தான் விலகினேன் - பல வருட சீக்ரெட்டை உடைத்த ஜோதிகா!

அந்த ஒரு சம்பவம்தான்; அதனால்தான் விலகினேன் - பல வருட சீக்ரெட்டை உடைத்த ஜோதிகா!

பர்சனல் பக்கம்

எனக்கு சூர்யாவை விட சூர்யாவின் குடும்பத்தினர் தான் மிகவும் நெருக்கம். நான் குழந்தை பெற்றபோது எனது அம்மாவும் சூர்யாவின் அம்மாவும் எனக்கு ஏகப்பட்ட அறிவுரைகளைச் சொன்னார்கள்‌.

surya family

சூர்யாவும் நானும் எங்களது நாட்களை திட்டமிடுகையில் குடும்பத்திற்காக ஒதுக்கும் நாட்களில் வேறு எந்த விதமான கமிட்மெண்டுகளுக்கும் ஓகே சொல்ல மாட்டோம். அதற்கேற்றவாறு எங்களது திட்டங்களை அமைத்துக் கொள்வோம்.

நான் படபிடிப்பு தளத்தில் இருக்கும் போது சூர்யா வீட்டில் என்ன சமைக்க வேண்டும் குழந்தைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்வார். நான் என்ன செய்தாலும் சூர்யாவும் அதில் எந்தவிதமான தடையும் விதிக்காமல் இருக்கின்றார். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்தான் எனத் தெரிவித்துள்ளார்.