சூர்யா குறித்து ரசிகை கேட்ட அந்த ஒரு வார்த்தை..ஜோதிகா என்ன சொன்னாங்க தெரியுமா?
சூர்யாவை ஒருநாள் கடனாகக் கொடுங்கள் என கேட்ட ரசிகைக்கு ஜோதிகா பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடன் கேட்ட ரசிகை
நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ‘சைத்தான்’ பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்த படப்பிடிப்பில் நிகழ்ந்த நினைவுகளை வீடியோவாகப் பகிர்ந்திருந்தார். அதோடு தனது கணவர், நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த சூர்யாவின் தீவிர ரசிகையான ஒருவர், ‘’சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் ஐஷூவுடன் ஒருநாள் சூர்யாவை அனுப்பி வைப்பது போல, எனக்கு ஒருநாள் கடன் கொடுப்பீர்களா? இந்த ஜென்டில்மேனுக்கு 15 வருடங்களாக ரசிகை நான்’ என்று கூறியிருந்தார்.
அதற்கு ரிப்ளை அளித்த ஜோதிகா, ‘கண்டிப்பாக அனுமதி இல்லை!’ என ஸ்ட்ரிக்டாக மறுத்துள்ளார். மீண்டும் அந்த ரசிகை ‘நீங்கள் ரிப்ளை செய்ததே மகிழ்ச்சி! சூர்யா எப்போதும் உங்களுடையவர்’ என்று தெரிவித்துள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.
ஜோதிகா
ஒரு பெரிய பிரேக்கிற்கு பிறகு ஜோதிகா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கும் படம் ‘சைத்தான்’. நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் பலர் நடித்த இந்த படம் நூறு கோடி ரூபாய் வசூலை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது.
இது குறித்து ஜோதிகா, ‘சில படங்கள் எனக்கு நல்ல பயணமாக அமைந்திருக்கிறது. அதில் ‘சைத்தான்’ படமும் ஒன்று. சந்தோஷம், நினைவுகள், நல்ல நண்பர்கள் என மகிழ்ச்சியான அனுபவம் இந்தப் படம் கொடுத்திருக்கிறது. மொத்த அணியினருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.