ஒரு நாளைக்கு சூர்யாவா..? ரசிகையின் கேள்வி - இன்ஸ்டாவில் கொந்தளித்த ஜோ..!

Suriya Jyothika
By Karthick Mar 22, 2024 07:27 AM GMT
Report

ரசிகை ஒருவர் சூர்யா குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட அதற்கு ஜோதிகா பதிலளித்துள்ளார்.

சூர்யா ஜோதிகா

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திர தம்பதிகள் சூர்யா - ஜோதிகா. கடந்த 11 செப்டம்பர் 2006-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.

jyothika-reply-to-fan-girl-comments-on-suriya

இவர்களுக்கு தற்போது தியா, தேவ் என 2 குழந்தைகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவேளைக்கு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா 36 வயதினிலே, ராட்சசி, மலையாளத்தில் மம்முட்டியுடன் "காதல் தி கோர்", ஹிந்தியில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள "சைத்தான்" என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வருகின்றார்.

சிவக்குமார் - சூர்யாவை பிரித்த ஜோதிகா..? மும்பை போக காரணம்..? போட்டுடைத்த பிரபலம்

சிவக்குமார் - சூர்யாவை பிரித்த ஜோதிகா..? மும்பை போக காரணம்..? போட்டுடைத்த பிரபலம்

சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் "கங்குவா" படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. Couple Goals என்று இன்றைய தலைமுறையினர் கூறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவர்களே என்றும் கூறலாம்.

jyothika-reply-to-fan-girl-comments-on-suriya

அந்த அளவிற்கு இவர்களது காதல் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் மறுபடியும் நிகழ்ந்துள்ளது. அண்மையில் சைத்தான் பட ஷூட்டிங் போது எடுத்த புகைப்படத்தை ஜோதிகா பதிவிட்டிருந்தார்.

ஜோதிகா பதில்

அந்த புகைப்படத்திற்கு கமெண்டில் ரசிகை ஒருவர், நான் கடந்த 15 ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகை… எனவே சில்லுனு ஒரு காதல் படத்தில் நீங்கள் ஐஸ்வர்யாவுக்கு உங்கள் கணவர் சூர்யாவை ஒரு நாள் கடன் கொடுப்பது மாதிரி எனக்கும் கடனாக தருவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

jyothika-reply-to-fan-girl-comments-on-suriya

இதற்கு பதிலளித்த ஜோதிகா, சிம்பிளாக "oops not allowed" என கட் அண்ட் ரைட்டாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.