சூர்யாவுக்கு விருந்தினர்கள் வரும்போது அந்த பழக்கமே அதனால்தான் - போட்டுடைத்த ஜோதிகா!
ஜோதிகா, தனது கணவர் சூர்யா குறித்து கூறியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகை ஜோதிகா
மலையாளத்தில் வெளியான 'காதல் ; தி கோர்' என்கிற படத்தில் மம்முட்டியின் ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஜியோ பேபி இயக்கியுள்ளார்.

இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், முதன்முறையாக ஜோதிகாவை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து கதை சொன்னேன். அப்படி சென்றபோது நடிகர் சூர்யா வரவேற்று தன் கையாலேயே அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்தார்.
சுவாரஸ்ய தகவல்
அதுமட்டுமல்ல ஒரு மொபைல் ஆப் மூலமாக மிக அதிக அளவில் விதவிதமான உணவுகளை வரவழைத்து தங்களுக்கு விருந்தோம்பல் செய்தார். அதன்பின்னர் ஒரு நாள் படப்பிடிப்பில் ஜோதிகா அந்த விருந்தோம்பல் குறித்து தன்னிடம் கூறும்போது சூர்யா எப்போதுமே

இதுபோன்று விருந்தினர்கள் வரும்போது தனக்கும் பிடித்தமான உணவுகளை சேர்த்து அதிக அளவில் ஆர்டர் செய்துவிடுவார்.
அப்படி விருந்தினர் வரும்போது மட்டும் தான் தன்னால் விதவிதமாக சாப்பிட முடியும் என்பதால் தான் அவர் அதிக அளவிற்கு உணவு ஆர்டர் செய்ததாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan