'நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்' - ஓய்வுபெறும் நாளில் உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு!
நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக இருந்தேன் என பிரிவு உபசார விழாவில் நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் தெரிவித்துள்ளார்.
சித்த ரஞ்சன் தாஷ்
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியா இருந்தவர் சித்த ரஞ்சன் தாஷ். சுமார் 14 ஆண்டுகளாக நீதிபதியாக இருந்த இவர், நேற்றுடன் ஓய்வுபெற்றார். இவருக்கு சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இணைந்து பிரிவு உபசார விழா நடத்தினர்.
அப்போது பேசிய நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் "நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக்கொண்டாக வேண்டும். எனது குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரை அங்கே இருந்தேன்.
திரும்ப தயார்
அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். எனது பணியின் காரணமாக சுமார் 37 ஆண்டுகளாக அமைப்பிலிருந்து விலகி இருக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது எதாவது உதவி அல்லது பணிக்காக அழைத்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு திரும்ப தயார்.
எனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தினேன். அது செல்வந்தரோ, இடதுசாரியா, காங்கிரசோ, பாஜகவோ அல்லது திரிணாமுல் காங்கிரசோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.