ஒரே ஜூஸ் தான் - 60 வயசிலும் தொடரும் இளமை!! நீதா அம்பானியின் சீக்ரெட் இது தானா?
அம்பானி குடும்பத்தினரை குறித்து பல்வேறு தகவல்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
அம்பானி
உலகின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் அம்பானியின் குடும்பம் குறித்த தகவல்கள் தொடர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்து கொண்டே இருக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த அம்பானி கடைசி மகனான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் உலகத்தின் கவனத்தையே பெற்றது.
கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் பாதி நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு கூட்டம் கூட்டமாக வந்து சென்று விட்டார்கள்.சுமார் ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக தகவலும் உள்ளது.
அம்பானிகள் குடும்பத்தில் அனைவரின் கவனத்தை எப்போதும் ஈர்ப்பது நீதா அம்பானி தான். குறிப்பாக அவரின் தோற்றம் பலரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயமாகும்.
அந்த ஒரு ஜூஸ்
காரணம், 60 வயதை எட்டியுள்ள அவர், இன்னும் இளமையாகவே தோன்றுகிறார். உடற்பயிற்சி, கட்டுக்கோப்பான ஹெல்த்தியான உணவு பழக்கத்தை பின்பற்றுபவராக இருக்கும் நீதா, மற்றுமொரு தனித்துவமான வழக்கத்தையும் கொண்டுள்ளார்.
அதாவது, பீட்ரூட் ஜூஸ் அருந்தவதை வழக்கமாக கொண்டுள்ளாராம் நீதா. இந்த பீட்ரூட் ஜூஸ் என்பது உடலை புத்துணர்ச்சியுடனும் ஒரு ஜூஸ் என கூறப்படுகிறது.
அந்த ஜூஸ் உடலை சுத்தப்படுத்துவதுடன் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகமாக கொண்டுள்ளதாம். இவையே அவரின் இளமையான தோற்றத்திற்கு காரணம் என சில செய்திகள் உள்ளது.