பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் மறைவு - பிரபலங்கள் இரங்கல்!

Rajinikanth Vijayakanth Death
By Sumathi Jan 27, 2023 05:05 AM GMT
Report

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

ஜூடோ ரத்தினம்  மறைவு

1966ம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘வல்லவன் ஒருவன்‘ திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சி மாஸ்டராக அறிமுகமானவர் ஜூடோ ரத்தினம்(93). இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் மறைவு - பிரபலங்கள் இரங்கல்! | Judo Rathnam Passes Away Vijayakanth Condolence

குறிப்பாக திரை ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன் மற்றும் நடிகர்கள் அர்ஜுன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். 013ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற இவர் கலைமாமணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரபலங்கள் இரங்கல்

இந்நிலைலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்திலும், நடிகர் ரஜினிகாந்த் நேரிலும் அஞ்சலி செலுத்தினார்.

பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் மறைவு - பிரபலங்கள் இரங்கல்! | Judo Rathnam Passes Away Vijayakanth Condolence

இதையடுத்து வேலூர், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது.