செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வின் நீதிபதி சக்திவேல் விலகல்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவினை விசாரிக்கும் அமர்வின் இரு நீதிபதிகளில் நீதிபதி சக்திவேல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அமைச்சர்
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரத்த நாளங்களின் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரியவந்தது.
காவேரி மருத்துமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி
இதையடுத்து ஓமந்துாராரர் அரசு மருத்துமனைக்கு வந்த இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியை தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நீதிபதி திடீர் விலகல்
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சட்டவிரோதமாக தன் கணவரை கைது செய்துள்ளதாக கூறி உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பான வழக்கினை விசாரிக்க தலைமை நீதிபதியின் அனுமதி பெற வேண்டும்.
இந்த நிலையில் இந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வின் 2 நீதிபதிகளில் நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.
இந்த நிலையில் உரிய நடைமுறையை பின்பற்றி வழக்கு பட்டியலிடப்படும் எனவும் வழக்கும் வேறொரு அமர்வுக்கு விசாரணைக்கு வரும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.