Free Fire Game.. என்ன செய்கிறது சைபர் கிரைம்? நீதிபதி சரமாரி கேள்வி!

Tamil nadu Madurai
By Sumathi Sep 13, 2022 02:27 PM GMT
Report

ப்ரீ பையர் விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் சைபர் கிரைம் என்ன செய்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ப்ரீ பையர் விளையாட்டு

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயரின் அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளைக் காணவில்லை.

Free Fire Game.. என்ன செய்கிறது சைபர் கிரைம்?  நீதிபதி சரமாரி கேள்வி! | Judge Asked About Free Fire Game And Cyber Crime

இது தொடர்பாக விசாரித்த போது, எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பிரீ பையர் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

 வழக்குப் பதிவு 

வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தேன்.ஆனால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

Free Fire Game.. என்ன செய்கிறது சைபர் கிரைம்?  நீதிபதி சரமாரி கேள்வி! | Judge Asked About Free Fire Game And Cyber Crime

ஆகவே எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் “ப்ரீ பையர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறையினர் அதனை விளையாடுவது எப்படி?

நீதிபதி  கேள்வி?

காவல்துறையினரும், சைபர் கிரைமினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதனால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவது வேதனையளிக்கிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.