ஃப்ரி-ஃபயர் கேம் விளையாட செல்போன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

coimbatore tnpolice studentsuicide phonedenied kinathukadavu freefiregame
By Swetha Subash Apr 12, 2022 11:43 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

கேம் விளையாட செல்போன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே, கிணத்துக்கடவு கண்ணப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி. இவருக்கு கிட்டன் அம்மாள் என்ற மனைவியும், முத்துமாரி, வேப்பிலைக்காரி, ஏசம்மா என்ற மூன்று மகள்களும், ஈஸ்வரன்,(13) அர்ஜுனன்(12) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

ஃப்ரி-ஃபயர் கேம் விளையாட செல்போன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை | Student Of 6Th Commits Suicide After Phone Denied

இந்த நிலையில் பழனிசாமியின் கடைசி மகனான அர்ஜுனன் சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

அதே பள்ளியில் அண்ணன் ஈஸ்வரன் படித்துவருகிறான்.நேற்று மாலை வழக்கம் போல் இருவரும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்து ஃப்ரி-ஃபயர் (free-fire)கேம் விளையாட செல்போன் கேட்டுதகறாரில் ஈடுபட்டுள்ளனர்.

ஃப்ரி-ஃபயர் கேம் விளையாட செல்போன் தர மறுத்ததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை | Student Of 6Th Commits Suicide After Phone Denied

இதனையடுத்து ஈஸ்வரன் செல்போன் தரமருத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அர்ஜுனன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அர்ஜுனன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட போன் தர மறுத்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.