ஜே.பி.நட்டா வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு - கொதிக்கும் பாஜக!

BJP trichy
By Sumathi Apr 06, 2024 10:33 AM GMT
Report

ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜே.பி.நட்டா

தமிழகத்தில் வருகிற மக்களவை தேர்தல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

ஜே.பி.நட்டா வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு - கொதிக்கும் பாஜக! | Jp Nadda Rally Denial Of Permission In Trichy

அதன்படி, தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திருச்சிக்கு வருகை புரிய உள்ளார். தொடர்ந்து, காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் - ஜே.பி.நட்டா நம்பிக்கை

தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும் - ஜே.பி.நட்டா நம்பிக்கை

பேரணிக்கு மறுப்பு

ஆனால், பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, காவல்துறை, தேர்தல் அலுவலர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில் மறுப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஜே.பி.நட்டா வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு - கொதிக்கும் பாஜக! | Jp Nadda Rally Denial Of Permission In Trichy

மேலும், மாற்று இடம் குறித்து பாஜகவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், திட்டமிட்டப்படி ரோடு ஷோ நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.