எந்த எல்லைக்கும் போவேன்; குற்ற உணர்ச்சியே இல்லையா? ஜாய் கிரிஸில்டா கண்ணீர்!
குழந்தைக்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிப்பதைத் தடுக்கவும், அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிடவும் கோரி ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் "மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கிற்காக ஆஜரான ஜாய் கிரிஸில்டா நீதிபதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். நான் அவதூறானா, பொய்யான தகவல்களை பரப்புவதாக கூறியிருக்கிறார்.
ஜாய் கண்ணீர்
எந்த பொய்யான அவதூறான தகவலையும் பரப்பவில்லை. இப்பொழுதும் என்னுடைய குழந்தைக்கு ஒரு நீதி வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டு இருக்கிறேன்.
அதே குழந்தைக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன். நான் போட்ட வீடியோவை டெலிட் செய்ய சொல்லி இருக்கிறார்கள். நான் எந்த தவறான தகவல்களை என்னுடைய சோசியல் மீடியாவில் பகிரவில்லை.
என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி தான் தந்தை, அதைத்தான் நான் பதிவிட்டிருந்தேன். தவறு செய்தவர்கள் ஜாலியாக வெளியில் இருக்கிறார்கள். ஆனால், தவறு செய்தவர்களை தட்டிக்கேட்கும் பெண்ணை இந்த சமூதாயம் அவமானப்படுத்துகிறது.
பல youtube சேனல்களில் என்னை பற்றி மோசமாக பேசுகிறார்கள். அதை யார் சொல்லி இப்படி பேசுகிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு பெண்ணை பற்ற தவறாக பேசுவர்கள் வீட்டிலும் அம்மா, அக்கா, தங்கை மனைவி என பெண்கள் இருக்கிறார்கள்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படி அவமானப்படுத்துவதால் தான் பல பெண்கள் துணிந்து வந்து எந்த விஷயத்தையும் வெளியில் சொல்வதே இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.