எனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் குழந்தை பிறந்திருக்கு - ஜாய் கிரிசில்டா!
ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஜாய் கிரிசில்டா புகார்
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆண் குழந்தை
குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், 7 மாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு,

வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    