வெளியேறிய ஜோவிகா..!! ஓடி வந்து சர்ப்ரைஸ் செய்த ஆண் நண்பர்..! வைரல் புகைப்படம்..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டுள்ளார் ஜோவிகா.
ஜோவிகா
வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா, இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நுழைந்தார். துவக்கம் முதலே சகபோட்டியாளர்களுடன் சண்டை, சச்சரவு என இருந்த ஜோவிகா, சோசியல் மீடியாவில் கணிசமான கவனத்தை ஈர்த்தார்.
படிப்பு முக்கியமில்லை என்றும், கணக்குகளை தவறாக போட்டது, தனது பெயரையே தவறாக எழுதியது என அடுத்தடுத்து சோசியல் மீடியாவில் பிக் பாஸ் ரசிகர்களால் பேசப்படும் நபராகவே தொடர்ந்தார் ஜோவிகா.
இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா எலிமினேட்டாகி வெளியேறிய நிலையில், அவரை குறித்த செய்திகள் சற்று ஓய்ந்திருந்தன. இந்நிலையில், தான் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளரான பிராவோவையும் நேரில் சந்தித்ததோடு மட்டுமின்றி அவருடன் அவுட்டிங்கும் சென்றிருக்கிறார் ஜோவிகா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜோவிகா வேலையில் பிசியான நிலையில், அவர் பணியாற்றும் இடத்துக்கே சென்ற பிராவோ அவரை சர்ப்ரைஸாக சந்தித்ததாக வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.