அவுங்க ரெண்டு பெரும் இல்ல...ஜோவிகாவோட அப்பா யாருனு தெரியுமா..? கொளுத்திப்போடும் பிரபலம்!!

Vanitha Vijaykumar Bayilvan Ranganathan Jovika Vijaykumar
By Karthick Oct 13, 2023 04:54 PM GMT
Report

வனிதா விஜயகுமாரின் முதல் கணவர் ஆகாஷிற்கு பிறந்த குழந்தை ஜோவிகா இல்லை என சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஜோவிகா விஜயகுமார்

பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. இவர் பிக்பாஸ் சீசன் 7னில் இடம்பெற்றுள்ளார். அதில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் தெரிவித்த தகவல் தற்போது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

jovika-dad-bayilvan-answers

மேலும், ஜோவிகா தனது தாத்தா விஜயகுமார் பெயரை தனக்கு பின்னால் பயன்படுத்துகிறார். பலரும் இது தொடர்பாகவும், ஜோவிகாவின் தந்தை குறித்தும் நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.

சர்ச்சைக்கு பதிலடி

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள வனிதா விஜயகுமார், “கரீனா கபூர், ஆமிர் கான், சல்மான் கான்” இவர்கள் பயன்படுத்தும்போது நாங்கள் பயன்படுத்தக் கூடாதா? ஜோவிகாவின் தந்தை ஆகாஷ்தான். நாங்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டோம்.

jovika-dad-bayilvan-answers

சிலர் சந்தர்ப சூழ்நிலையால் குடும்ப பெயரை பயன்படுத்துகின்றனர். ஜோவிகாவின் தந்தை ஆகாஷ் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; ஆகாஷ் பெயரைதான் ஜோவிகா இனிஷியலாக போடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

விஷால் சொன்ன அந்த வார்த்தை.. வாழ்க்கையே போச்சு, ஆபாச படம் எடுக்கப்போகிறேன் - லிவிங்ஸ்டன் வேதனை!

விஷால் சொன்ன அந்த வார்த்தை.. வாழ்க்கையே போச்சு, ஆபாச படம் எடுக்கப்போகிறேன் - லிவிங்ஸ்டன் வேதனை!

பயில்வான் கருத்து

இந்நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் புது புரளியை கிளப்பி விட்டுள்ளார். அந்த வீடியோவில், நடிகை வனிதாவின் முதல் கணவருக்கோ, இரண்டாவது கணவருக்கோ பிறந்த குழந்தை ஜோவிகா இல்லை என தெரிவித்தார்.

jovika-dad-bayilvan-answers

இந்த தகவலை தான் கூறவில்லை என தெரிவித்து, இதனை வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன் தான் கூறினார் என்று தெரிவித்து, முதல் கணவரிடம் இருந்து பிரிந்த வனிதா, அப்போது ஒரு மென்பொருள் ஊழியர் ஒருவரிடம் லீவ் இன் முறையில் வாழ்ந்தார் என்று, அந்த பழக்கத்தில் பிறந்த குழந்தை தான் ஜோவிகா தான் என பேசினார். மேலும், வனிதாவை நவீன பாஞ்சாலி என விமர்சித்த பயில்வான், தந்தை எவ்வழியோ மகளும் அவ்வழியே தான் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.