அது தான் "டா" உன்னோட வேல...ஓவராக போன ஜோவிகா!! கலவரமான பிக் பாஸ் வீடு!!
அண்மையில் வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் ஜோவிகா பிரதீப்பை மரியாதையில்லாமல் அவன் இவன் வாடா போடா என பேசியிருப்பது வைரலாகி இருக்கின்றது.
ஜோவிகா
வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே விசித்திராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோவிகா கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றார். படிப்பு முக்கியம் என்பதை பலரும் உபதேசித்து ஜோவிகாவின் அந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.
இதற்கிடையில் தான் தற்போது அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகி மீண்டும் ஜோவிகா மீது விமர்சனங்களை குவித்து வருகின்றது. வயதில் இளையவரான ஜோவிகா தன்னை விட மூத்த பிரதீப்பை கோபத்தில் அவன் இவன் என அவர் திட்டுவது அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இரு தரப்பினருக்கு சண்டை வருவது சாதாரணமானது தான் என்றாலும், ஜோவிகா மரியாதை கூட இல்லாமல் பேசி சண்டையிட்டதை பலரும் வறுத்தெடுக்க துவங்கி இருக்கின்றார். நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டில் தனது கோபமான செயல்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து தற்போது ஜோவிகாவும் எல்லை மீறி இருப்பது சமூகவலைத்தளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.