கட்டிபிடித்தபடி பெட்ரோல் டேங்கில் அமர்ந்து காதலி பயணம்; வைரலாகும் வீடியோ - போலீசார் அதிரடி!
சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்த காதல் ஜோடிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
முகம் சுளிக்கும் செயல்
சாலைகளில் போக்கு வரத்து விதிமீறல்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதில் சிலர் சாலைகளை போக்குவரத்திற்கு பயன்படுத்தாமல், ஸ்டண்ட் செய்வதற்கும், முகம் சுளிக்க வைக்கும் செயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அவர்கள் விபத்துக்குள்ளாவது மட்டுமல்லாமல் அப்பாவி பொதுமக்களுக்கும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலம் கபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காதல் ஜோடி பைக்கில் பயணித்தனர். அதில் அந்த பெண் பின்புற இருக்கையில் அமராமல், முன் பகுதியில் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும்படி பயணித்துள்ளார்.
அபராதம்
பயணத்தின் போது அந்த பெண் தனது காதலனை இறுக்கமாக கட்டிபிடித்தபடி பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளார். இதனை அவ்வழியே சென்ற பலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனைக் கண்ட நெட்டிசன்கள், விபத்தின் பயம் குறித்து அறியாமல் இந்த பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட அந்த காதல் ஜோடியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு வீடியோவை டேக் செய்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பைக் ஓட்டுநருக்கு ரூ.8,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
#Hapur Video of the romance of the new couple on the bike. The woman was sitting on the tank of the bike and hugging her husband #Viralvideo #India pic.twitter.com/hCtt4JhnWL
— Yauvani (@yauvani_1) October 10, 2023