flowல வந்திருக்கும்; லைவ்வில் கெட்ட வார்த்தை பேசிய செய்தியாளர் - மன்னிப்பு கேட்ட சேனல்!
லைவ்வில் செய்தியாளர் ஒருவர் தவறுதலாக கெட்ட வார்த்தை பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
லைவ்வில் செய்தியாளர்
டெல்லி உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மிகவும் பரபரப்பான பதஞ்சலி வழக்கு விசாரணைக்கு வந்து இருந்தது. இச்சுழலில், பிரபல தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளரான அஸ்மித் என்பவர் அந்த வழக்கு தொடர்பான விவரங்களை நேரில் வழங்கிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி நேரலையில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல் பேசிக்கொண்டு இருந்த அவர் திடீரென சொல்ல வந்ததை மறந்துவிட்டார்,இதையடுத்து நேரலையிலேயே சில தவறான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். இது லைவில் ஒளிபரப்பாகிவிட்டது.
அப்போது இதை உடனடியாக சுதாரித்த நிகழ்ச்சி வழங்கிக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை மீண்டும் தொடர்பு கொள்கிறோம் எனக்கூறி இணைப்பை துண்டித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மன்னிப்பு கேட்ட சேனல்
அதே சமயத்தில் தான் தவறான வார்த்தைகளை சொல்லிவிட்டோம் என்று செய்தியாளர் அஸ்மித் தவறை உணர்ந்தார். இருப்பினும் அதற்குள் அது டிவியில் லைவ்வாக வந்து வைரலாக மாறியது. இந்த விவகாரம் குறித்து அந்த தனியார் செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.
அதில், "இன்று ஒரு நேரடி ஒளிபரப்பில், ஒரு நிருபர் கவனக்குறைவாக தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.அவர் லைவ்வில் இருப்பதை உணரவில்லை. தவறுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதை உறுதிசெய்ய இன்னும் கடினமாக உழைப்போம்" இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வீடியோவை பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் அந்த செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒரு சிலர், பொதுவாக இதுபோன்ற நேரங்களில் தவறு ஏற்படுவது இயல்புதான் மனித தவறுக்கு எதுவுமே செய்ய முடியாது அவரை விமர்சிக்க வேண்டாம். அதே நேரத்தில் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடும் போது மிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.