கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை பார்த்த விக்னேஷ் சிவன் -அங்கேயே தங்கி.. பிரபலம் ஒபன்டாக்!
கவர்ச்சி நடிகை வீட்டில் விக்னேஷ் சிவன் வேலை பார்த்ததாக பிரபலம் ஒருவர் கூறியது வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன்
போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். மேலும், பல ஹிட் படங்களையும் இயக்கியுள்ளார். பிரபல நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கிவருகிறார்.
முதலில் அந்தப் படத்துக்கு எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தினை விக்னேஷ் சிவன் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்த சூழலில், சமீப நாட்களாக நயனும், விக்னேஷ் சிவனும் சர்ச்சையில் சிக்கிவருகின்றனர்.
பிரபலம்
தனுஷுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து, நயன் அளித்த பேட்டியில், வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று கூறினார். அதற்கு பல கண்டனம் எழுந்தது. இதனிடையே, அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அதனை மறுத்து விக்கி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த அந்தப் பேட்டியில் விக்னேஷ் சிவன் குறித்து பேசியிருந்தார்.
அதாவது, "கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் வேலை செய்தவர்தான் விக்னேஷ் சிவன். பல மாதங்கள் அவரது வீட்டில்தான் விக்னேஷ் சிவன் தங்கியிருந்தார்" என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.