பாத்ரூம் போறதுக்கு கூட வழி இல்ல; வடமாநிலத்தவர்கள் அட்டூழியம் - ரயிலை நிறுத்திய பயணிகள்
அபாய சங்கிலியை பிடித்து பயணிகள் ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்பதிவு
கொச்சுவேலியில் இருந்து கொரக்பூர் வரை செல்லும் ரப்தி விரைவு ரயில் ஜோலார்பேட்டை நிலையத்தில் நின்றது. இந்த ரயில் அங்கிருந்த 3 நிமிடங்களில் புறப்பட தயாரான நிலையில், சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
உடனே, ரயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து விசாரித்ததில், எஸ்-1 முதல் எஸ்- 3 வரை முன்பதிவு செய்த பெட்டியில் 2-ம் வகுப்பில் பயணிக்க கூடிய இளைஞர்கள் பலர் அத்துமீறி ஏறி கழிப்பறை வரை வரிசையாக அமர்ந்து பயணம் செய்ததால் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும்,
இளைஞர்கள் அட்டகாசம்
நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு பெட்டியில் பயணித்தாலும், 2-ம் வகுப்பு டிக்கெட் எடுக்கும் இளைஞர்கள் பலர் முன்பதிவு செய்த பெட்டியில் பயணிப்பது மட்டும் அல்லாமல் கழிப்பறைக்குள்ளே அமர்ந்து பயணிப்பதால் தங்களால் எளிதான பயணம் மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயிலில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். 2-ம் வகுப்பு பெட்டியை கூடுதலாக இணைத்தால் நாங்கள் ஏன் முன்பதிவு பெட்டியில் ஏறப்போகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அதனையடுத்து, அனைவரும் 2-ம் வகுப்பு பெட்டியில் ஏற்றப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டது.