முதல்முறையாக சென்னை - மைசூர் இடையே ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

Narendra Modi Chennai
By Nandhini Nov 11, 2022 08:13 AM GMT
Report

இன்று தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னை- மைசூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

‘வந்தே பாரத்’ ரயிலின் சிறப்பம்சங்கள்

நாட்டின் அதிவேக ரயில்தான் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் மற்ற ரயில்களை விட 40 முதல் 50 சதவீதம் அதிவேகமாக செல்லக்கூடியது.

பிற ரயில்களை காட்டிலும் இதில் நவீன வசதிகளுடன் தானியங்கி கதவுகள், இணைய வசதிகள், மிகவும் சொகுசான இருக்கை வசதிகள், கழிவறை வசதிகளை கொண்டிருக்கும். ‘வந்தே பாரத் ரயில்’ ஒரு நிமிடத்திற்கு 52 விநாடிகளிலே பூஜ்ஜியம் கிலோமீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

குஜராத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவை

கடந்த செப்டம்பர் 30ம் தேதி குஜராத் மாநிலம், காந்தி நகர்- மும்பை இடையிலான ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ‘வந்தே பாரத்’ ரயில்களை உருவாக்குவதில் பணியாற்றிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் பிரதமர் உரையாடினார்.

அப்போது, பிரதமர் மோடியிடம் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் சிறப்பு அம்சங்களை அதிகாரிகள் எடுத்து கூறினர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் வேகம், சேவை பாதுகாப்பில் சிறப்பு வாய்ந்தாக உள்ளது என்றனர்.

narendra-modi-vande-bharat-train

சென்னை - மைசூர் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை

நாட்டின் 75 முக்கிய நகரங்களில் இந்த ‘வந்தே பாரத் ரயில்’ இயக்க திட்டமிடப்பட்டது. தற்போது இந்தியாவில் இந்த ரயில்கள் 4 வட மாநிலங்களில் மட்டுமே இயங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை - மைசூர் இடையிலான ‘வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து, பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்து சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2வது முனையத்தை திறந்து வைத்தார்.

பிறகு, கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க உள்ளார். இதன் பின், அதே நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

தமிழகம் வருகை

இன்று மாலை தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இவ்விழாவில் கலந்துகொள்ளும் மோடி, மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.