அதிமுக ஒருங்கிணைப்பில் நெருங்கிவிட்டோம் - சசிகலா
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியின் பக்கத்தில் நெருங்கிவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக
பேரறிஞர் அண்ணாவின் 54 ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி சசிகலா அண்ணா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் உறுதிமொழி ஏற்றபின் மௌன அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியின் பக்கத்தில் நெருங்கி விட்டோம்.
சசிகலா
தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லது இல்லை. அதிமுகவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க அதிமுக ஒன்றிணைவது அவசியம் என்றார்.
தொடர்ந்து பேனா சின்னம் தொடர்பாக பதிலளித்த அவர், "பேனா நினைவுச்சின்னம் வைப்பதற்கு மட்டும் ரூ.87 கோடி அரசுக்கு எங்கிருந்து வருகிறது? பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.