அதிமுகவில் மீண்டும் சசிகலா? ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ விரைவில் சந்திப்பேன் என அறிவிப்பு

ADMK AIADMK V. K. Sasikala Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jan 17, 2023 08:00 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்திக்க உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

ஆளுநருடன் மோதல் கூடாது

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி. நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்ஜிஆர் உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செய்தார்.

I will meet OPS and EPS soon Sasikala

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தொண்டர்களுடன் இணைந்து எம்ஜிஆருக்கு மரியாதை செய்தது மகிழ்ச்சி. ஆளுநர் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெரியாது போது அதன் மீது கருத்து சொல்வது சரியாக இருக்காது.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுக அல்லது தமிழ்நாடு மட்டும் முடிவு செய்திட முடியாது. எல்லா மாநிலங்களின் பங்கும் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநர் விவகாரத்தில் தமிழக அரசு எப்படி நடந்து கொள்கிறார்களோ அதன்படிதான் ஆளுநரின் நடவடிக்கையும் இருக்கும்.

ஆளுநருடன் போட்டி போட்டு நடத்துவது அரசாங்கமாக என்பது எனக்குத் தெரியவில்லை. மக்களுக்கு செய்யக் கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது.

ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ விரைவில் சந்திப்பேன் 

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதைத்தான் செய்தார்கள். திமுக கூட்டணியில் உள்ளதால் மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்க மறுக்கிறார்கள். பொங்கலுக்கு கரும்பு கொடுக்கக் கூட இவர்கள் தயாராக இல்லை.

நாங்கள் எல்லோரும் அறிக்கைவிட்ட பிறகு திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஒன்றிணைய வேண்டும். நிச்சயமாக அது நடக்கும். திமுகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினரை விரைவில் சந்திப்பேன். அவர்களைச் சந்திக்க செல்லும் போது நிச்சயம் உங்களிடம் சொல்லிவிட்டு செல்கிறேன். அனைவரையும் இணைக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.