அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை.. போர் நிறுத்தம்?
இஸ்ரேல் பிரதமருடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. பல நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கேட்பதாக இல்லை, தொடர்ந்து முப்படை தாக்குதலை காசா மீது நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆலோசனை
இந்நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது. போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan