டிரம்ப் மீது துப்பாக்கி சூடு விவகாரம்...மௌனம் களைத்த அதிபர் ஜோ பைடன்!
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
டிரம்ப் விவகாரம்
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார்.
முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குல் அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் அதிபர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
ஜோ பைடன்
அப்போது பேசிய அவர், "இந்த நாட்டின் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியது. இதனை குளிர்விக்கும் நேரம் வந்துவிட்டது. அரசியல் களம் உண்மையான போர் களமாகவோ, கொலை களமாகவோ மாறிவிட கூடாது. இது சோதனை காலக்கட்டம். இந்த நேரத்தில் வாக்குப் பெட்டி தான் போர் பெட்டி," என்று கூறியுள்ளார்.
தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டு பாதுகாப்பு துறை மீது ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது.