இந்து சமய அறநிலையத்துறையின் சூப்பர் அறிவிப்பு - இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!
புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலைய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத் துறை, வக்பு ஆகியவற்றில் செயல் அலுவலர் (கிரேடு-2)-3 பணியிடங்களும், செயல் அலுவலர் (கிரேடு-3)-2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதே போல் கோவில் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பணிக்கு தலா 1 பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. கிரேடு 2 பணிக்கு 5 ஆண்டுகள் அனுபவமும், கிரேடு 3 பணிக்கு 5 ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலைய துறை
ஆய்வாளர் பணிக்கு கோவில் நிர்வாகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். துணை ஆய்வாளர் பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி மற்றும் டைப்ரைட்டிங் லோயர் (தமிழ், ஆங்கிலம்) தொழில் கல்வி முடித்திருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூ.5,200 முதல் அதிக பட்சம் ரூ.20 ஆயிரத்து 200 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.இந்த பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 56 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.