திருப்பதியில் லட்டு பிடிக்க ஆட்கள் தேவை; இந்த ஒரு தகுதி ரொம்ப முக்கியம் - கிளம்பிய சர்சை!
கோவிலில் லட்டு பிடிக்க ஆட்கள் தேவை என வெளியிடப்பட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு
திருப்பதி லட்டுக்கு என்று தனி சுவை, மணம் உண்டு. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சுத்தமான பசு நெய்யால் முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படும் லட்டுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் ஆச்சாரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடும் பெற்றுள்ளது. 1715 ஆம் ஆண்டு முதல்தான் ஏழுமலையானுக்கு லட்டு வைத்து நெய்வேத்தியம் செய்ய தொடங்கியுள்ளனர்.
ஆட்கள் தேவை
பின்னர் 1803 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 21,139 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும். குறிப்பாக வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஊழியர்களை வழங்கும் ஸ்ரீ லட்சுமி ஸ்ரீனிவாசா மேன் பவர் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது.
இந்த சாதி தகுதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.