வெறும் ரூ.895 போதும்; 1 வருடத்திற்கு கவலையில்லை - ஜியோவின் ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் விலை குறைந்த ரீசார்ஜ் திட்டம் எது தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இதில் மிகவும் விலை குறைந்த ரூ.900க்கு ஒரு வருட செல்லுபடியாகும் திட்டம் ஒன்று உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.895. இதன் தினசரி செலவு ரூ.2.66.
இதன்மூலம், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகளை பெற முடியும். மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில், உங்களுக்கு 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படும். 12 மாதங்களுக்கு ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 600 SMS இலவசம்.
1 வருட சேவை
எந்த நெட்வொர்க்கிலும் உள்ள யாருடனும் 336 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுக்குப் பேச முடியும். இந்த திட்டத்தின் மூலம், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட்டின் இலவச சந்தாவையும் பெறலாம். ஜியோவின் இந்த 895 ரூபாய் திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சாதாரண ஸ்மார்ட்போன் பயனர்கள் ரூ.1748 திட்டத்தின் மூலம் 336 நாட்களுக்கான சேவையை பெறலாம். இதன்மூலம், வரம்பற்ற அழைப்பு மற்றும் 3600 எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவீர்கள். டேட்டா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.