ஆஹா ஜியோ சூப்பர் சம்பவம்.. 24 மணி நேரம் இலவச ஒடிடி.. அதுவும் ரூ.500க்கு - முழு விவரம்!
ரிலையன்ஸ் ஜியோ ரூ.500க்குள் பல ப்ரீபெய்ட் திட்டங்களில் இலவச ஓடிடி சந்தாக்கள் வழங்குகிறது.
இலவச ஒடிடி..
ரிலையன்ஸ் ஜியோ 500 ரூபாய்க்குள் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்களை வழங்குகின்றன, சோனிலிவ், ஜீ5 மற்றும் ஜியோசவன் ப்ரோ போன்ற ஓடிடி தளங்களை பயன்படுத்தும் அணுகலை வழங்குகின்றன.
இதில் இலவச ஓடிடி சந்தாக்கள் அடங்கும். பெரும்பாலனவர்கள் ஒடிடி கொண்ட திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நினைப்பதுண்டு ஆனால் 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் இந்த இலவசப் பலன்களைப் பெறலாம்.
இருப்பினும், இந்த சேவைகளை ஸ்ட்ரீம் செய்ய, ஒரு தனி சந்தா எடுக்க வேண்டும். அதாவது மொபைலை ரீசார்ஜ் செய்யும்போது OTT சேவைகளின் நன்மைகள் இலவசமாக வழங்கப்படும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
ரூ.500க்கு..
ஜியோவின் மலிவான திட்டமானது டேட்டா-மட்டும் திட்டம் மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 10ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுவதில்லை.
சோனிலிவ் மற்றும் ஜீ5 உள்ளிட்ட 10 ஓடிடி சேவைகள் இந்த திட்டத்தை ஜியோ டிவி பிரீமியம் திட்டங்களின் ஒரு பகுதியாகும் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. விளம்பரமில்லா இசையைக் கேட்க ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ரூ.329 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் விருப்பம் உள்ளது மற்றும் இது JioSaavn Pro இன் சந்தாவை வழங்குகிறது.