18 ஓடிடி தளங்களை முடக்கியது மத்திய அரசு - எதெல்லாம்,என்ன காரணம் தெரியுமா?

Government Of India
By Sumathi Mar 14, 2024 09:46 AM GMT
Report

 18 ஓடிடி தளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.

ஆபாச காட்சிகள் 

திரையரங்குகளுக்கு அடுத்து ஓடிடி தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சினிமாவில் படங்களுக்கு அதிக அளவிலான வன்முறை, ஆபாசம், மதம்-ஜாதி குறித்தான தாக்கு போன்றவற்றை நெறிப்படுத்த சென்சார் போர்டு இருக்கிறது.

18 ஓடிடி தளங்களை முடக்கியது மத்திய அரசு - எதெல்லாம்,என்ன காரணம் தெரியுமா? | Centre Blocks 18 Ott Platforms For Pornographic

ஆனால், ஓடிடி தளங்களுக்கு அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, அதிக வன்முறை, ஆபாசம், மதம் குறித்து தவறான விஷயங்கள் பரப்புவது எனப் பல சர்ச்சைகளுக்கு ஆளானது.

விஜய் டிவியை விற்க முடிவெடுத்த நிறுவனம் - வாங்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்... ஊழியர்கள் கலக்கம்..!

விஜய் டிவியை விற்க முடிவெடுத்த நிறுவனம் - வாங்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்... ஊழியர்கள் கலக்கம்..!

ஓடிடி முடக்கம்

இதனைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அதிக அளவில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ஓடிடி தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.

union Minister Anurag Singh Thakur

அதன் அடிப்படையில், அதிக ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்த 18 ஓடிடி தளங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மேலும், 19 இணையதளங்கள் 10 செயலிகள் மற்றும் 57 சமூக வலைதளங்கள் ஆகியவற்றையும் முடக்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த செயலுக்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.