விஜய் டிவியை விற்க முடிவெடுத்த நிறுவனம் - வாங்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்... ஊழியர்கள் கலக்கம்..!

Sony TATA Tamil TV Shows
By Thahir Aug 04, 2023 03:44 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியின் முன்னனி சேனலான விஜய் தொலைக்காட்சியை அதன் நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியை விற்க முடிவு 

விஜய் டிவியில் ஒளிப்பரப்ப படும் வித்தியாசமான ஷோக்கள் மற்றும் சீரியலுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஸ்டார் குழுமம் விஜய் டிவியை வாங்கிய பின்னர் அதை ஸ்டார் விஜய் என்று மாற்றம் செய்தது. அதன்பின்னர் ஸ்டார் விஜய் டிவியை டிஸ்னி நிறுவனம் கைப்பற்றியது.

vijay-tv-for-sale

டிஸ்னி நிறுவனம் விஜய் டிவியையும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தையும் வெற்றிக்கரமாக நடத்தி வந்த நிலையில் தற்போது திடீரென விஜய் டிவியை விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள் 

டிஸ்னி நிறுவனம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தை மட்டும் வைத்து கொண்டு விஜய் டிவியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

அதனை வாங்குவதற்கு பிரபல மூன்று நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றனர். டிஸ்னி நிறுவனம் விஜய் டிவியை விற்பனை செய்யவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் உலகில் முன்னணி நிறுவனங்களாக திகழும் ஜியோ, டாடா, சோனி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

vijay-tv-for-sale

அதில் அதிக விலை கொடுத்து யார் வாங்கப் போகிறார் என்ற தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.