அமெரிக்க அதிபர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி - ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு சிக்கல்!

COVID-19 Joe Biden United States of America
By Vinothini Sep 05, 2023 05:40 AM GMT
Report

அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜில் பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபரின் மனைவிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.

jill-biden-affected-covid-19

அதேநேரம் தனக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதிபரின் மனைவிக்கு தொற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பயணம் பாதிப்பு

இந்நிலையில், டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 9 ,10 ஆகிய தேதிகளில் `G20' மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

jill-biden-affected-covid-19

இதற்கான ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு கண்டிப்பாக வரும் தருவதாக உறுதியளித்த நிலையில் தற்பொழுது அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மாநாட்டிற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.