கர்ப்பமாகி 7 மாதம் தான்.. ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள் - தவிக்கும் பெற்றோர்!
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.
7 மாத கர்ப்பம்
ஜார்க்கண்ட், சதார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கர்ப்பிணி ஆன இவர் கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே, உள்ளூர் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தால், ராஞ்சி மருத்துவமனையில் 7 மாதத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, டாக்டர் சசி பாலா சிங் தலைமையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் 5 பெண் குழந்தைகள் பிறந்து ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. சிசுக்கள், இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் சிறு தவிப்பில் உள்ளனர்.
5 குழந்தைகள்
இது குறித்து ஆர்.ஐ.எம்.எஸ்.மருத்துமனை வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அக்குழந்தைகள் ஆரோக்கியத்துடன், அதே சமயம் எடை குறைவாக இருக்கின்றன.
எனவே வளர்ச்சிக்காக அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு டாக்டர்கள் முழு நேரமும் கண்காணித்து வருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பது 55 மில்லியன் பிரசவத்தில் ஒன்றுதான் நடக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.