விதவைகள் மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் - அரசு அறிவிப்பு!

Marriage Jharkhand
By Sumathi Mar 07, 2024 11:10 AM GMT
Report

மறுமணம் செய்துகொள்ளும் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமணம் 

ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.

widow remarriage

இதில் அங்கு மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கவுள்ளதாக அரசு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தாய்க்கு ஆசையாக மறுமணம் செய்து வைத்த மகள் - நெகிழ்ச்சி!

தாய்க்கு ஆசையாக மறுமணம் செய்து வைத்த மகள் - நெகிழ்ச்சி!

உதவித்தொகை

இதுகுறித்து பேசியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது.

விதவைகள் மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் - அரசு அறிவிப்பு! | Jharkhand Widow Remarriage Scheme

விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.