3 மாதங்களாக காணாமல் போன சிறுமி - பாம்பு போல் குகையில் சீரும் வைரல் வீடியோ
குகை ஒன்றில் சிறுமி பாம்பு போல் ஊர்ந்து நாக்கை நீட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுமி மாயம்
ஜார்க்கண்ட் மாநில கர்வா சேர்ந்த விஸ்வநாத் ஓரானின் மகள் சாத்வி நீலம் கடந்த மே 16 ம் தேதி காணாமல் போயுள்ளார். காணாமல் போகும் முன், தன் தாய் அமராவதி தேவி மற்றும் அண்ணன் கௌதம் ஓரானிடம், நான் குகைக்கு செல்லப் போகிறேன், கோவிலை சேதப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் அவரை தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின் ஜூலை 27 ம் தேதி அவரின் தாயின் கனவில் வந்து தான் ரனிதி குப்தா குகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
குகையில் மீட்பு
இதனையடுத்து, குகையின் உள்ளே 40 மீட்டர் சென்ற போது, ஜெய் மா காளி என சத்தம் கேட்டது. கிட்டே சென்று பார்த்த பொழுது, சிவலிங்கத்தின் அருகே பாம்பு போல் ஊர்ந்து நாக்கை நீட்டிக்கொண்டு இருந்துள்ளார். இது பற்றி பேசிய அவர் தந்தை, 72 நாட்களாக அவர் உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். காணாமல் போகும் முன் அவருக்கு நடந்த சம்பவம் கூட நினைவில்லை என கூறியுள்ளார்.
மேலும் மக்கள் கீர்த்தனை செய்தால் தான் அவர் பழைய நிலைக்கு திரும்புவார் என கூறினார். இதன் பின்ன 12 மணி நேரம் மக்கள் கீர்த்தனை செய்துள்ளனர். தற்போது பொதுமக்கள் வந்து அவரை வணங்கி சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.