சினேகன் அளித்த பரபரப்பு புகார் - நடிகை ஜெயலட்சுமி கைது!
மோசடி வழக்கில் நடிகை ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சினேகன் புகார்
சினேகன் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி,
சினிமா பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
ஜெயலட்சுமி கைது
அந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அதனை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், சினேகன் அளித்த புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி, நம்பிக்கை மோசடி, ஆவணங்கள் மோசடி என இருபிரிவுகளின் கீழ்,
ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமங்கலம் போலீசார், இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.