மாறி மாறி சாடிக்கொண்ட சினேகன், ஜெயலட்சுமி - கடைசியில்...
சினேகன், ஜெயலட்சுமி இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோசடி
சினேகன் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி, சினிமா பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வரும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
வழக்கு பதிவு
இந்த நிலையில் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இருவரும், எழும்பூர் நீதிமன்றத்தை நாடினர்.
கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி, நீதிமன்றம் உத்தரவின் பேரில், ஆபாசமாக பேசுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சினேகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சினேகன் அளித்த புகாரின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி, நம்பிக்கை மோசடி, ஆவணங்கள் மோசடி என இருபிரிவுகளின் கீழ் , ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருமங்கலம் போலீசார், இருவரையும் அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil