அதிரவைக்கும் பாலியல் ஸ்ட்ரைக்; கணவருடன் இருக்க மறுத்த பெண்கள் - என்ன பின்னணி?
அமெரிக்காவில் கணவருக்கு எதிராக மனைவிகள் பாலியல் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் ஸ்ட்ரைக்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வாழ் யூத பெண்கள், தங்களது ணவருடனான பாலியல் உறவைத் துண்டித்து பாலியல் ஸ்ட்ரைக் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் படி, கணவர்களுடன் இனி உறங்குவதில்லை என சமூக ஊடகங்களில் யூதப் பெண்கள் கூடி உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
யூத மனைவிகள் மேற்கொள்ளும் இந்த போராட்டத்திற்கு பல சமூகம்,பிரிவுகள், மதங்களைச் சேர்ந்த மனைவிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இதில் பலரும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பின்னணி
முதலில் சுமார் 800 யூத பெண்களுடன் தொடங்கிய இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்து, மிகவும் பழமையான யூத சட்டத்துக்கு எதிராக கோஷமிட்டனர். மனைவிகள் விவாகரத்து பெறுவதை கடினமாக்கும் பிற்போக்கு சட்டத்தை எதிர்த்து அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
திருமண வாழ்ககையில் பிரச்சனையோ அல்லது துன்புறுத்தலோ இருந்தால் அந்த உறவை முறித்துக்கொள்ள மனைவிகளுக்கு உரிமை கிடையாது. விவாகரத்து வேண்டுமானால் அவர்களது கணவர்களிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பற்ற பின தன வழங்கப்படும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கணவர்கள் மேலும் துன்புறுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். மதங்கள் எதுவென்றாலும் அதன் பிற்போக்கு சட்டமானது பெண்களை மையமிட்டே செயல்படுகிறது.
பெண்களின் உரிமைகள், சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் இந்த மத கட்டுப்பாடுகளுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் போராடி வருகின்றனர்.